வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்
x
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், காவல் நிலையம் அருகே வாகனத்துக்கு தீ வைத்து, அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். இதற்கு, அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், முக்கிய குற்றவாளிகளான11 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்