சுரங்கப்பாதையில் வெள்ள நீர் புகுந்ததால் 5 கி.மீ சுற்றி செல்லும் கிராம மக்கள்

ஆரணி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ள நீர் புகுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சுரங்கப்பாதையில் வெள்ள நீர் புகுந்ததால் 5 கி.மீ சுற்றி செல்லும் கிராம மக்கள்
x
ஆரணி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ள நீர் புகுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கண்ணமங்கலம் பேரூராட்சிக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே சுரங்க பாதையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக ரயில்வே சுரங்கபாதையில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் மாணவ மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்