இன்று முதல் 10,000 மேற்பட்ட லாரிகள் இயங்காது - தமிழ்நாடு டிரைலர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கன்டெய்னர் லாரிகள் இன்று முதல் இயங்காது என தமிழ்நாடு டிரைலர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று முதல் 10,000 மேற்பட்ட லாரிகள் இயங்காது - தமிழ்நாடு டிரைலர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
x
நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், டிரைலர் லாரிகளில் அதிக பாரம் ஏற்ற மாட்டோம் என தமிழ்நாடு டிரைலர்  லாரி உரிமையாளர் சங்கம்  உறுதியளித்து உள்ளது. ஒரு லாரியில் ஒரு சரக்கு பெட்டகம்  மட்டுமே ஏற்றுவோம்  என்றும், அதிக பாரம் ஏற்றி செல்ல  தங்களை வற்புறுத்தக் கூடாது என சென்னை துறைமுகத்திற்கும், சரக்குப் பெட்டகம்  கையாளும் நிறுவனங்களுக்கும் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  இதுவரை தங்களை அழைத்து பேச்சுவார்த்தையில்  ஈடுபடாததால், இன்று முதல் லாரிகளை இயக்க மாட்டோம் என்றும், இந்த வேலைநிறுத்தத்தில்  பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கண்டைனர் லாரிகள் இன்று இயங்காது என தமிழ்நாடு ட்ரெய்லர் உரிமையாளர் சங்க தலைவர் மனோகரன் தெரிவித்துள்ளார். அதிக பாரம் ஏற்றி விடுவதால், விபத்து மற்றும் வாகனங்கள் சேதம் அடைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை கூடுதல் பாரத்திற்கு டன்னுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை செலுத்தி இயக்கியதாகவும், தற்போது ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால், இனி ஒரு கண்டெய்னர் மட்டுமே ஏற்ற ஒப்புக் கொண்டால் மட்டுமே டிரைலர்களை இயக்குவோம் என தெரிவித்துள்ளனர். இதனால் 3 துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து முடங்கும் நிலை உருவாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்