உணவு உற்பத்தியில் தமிழக விவசாயிகள் புரட்சி செய்ய வேண்டும் - தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத்

உணவு உற்பத்தியில் தமிழக விவசாயிகள் புரட்சி செய்ய வேண்டும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
உணவு உற்பத்தியில் தமிழக விவசாயிகள் புரட்சி செய்ய வேண்டும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்லணை ,கீழ் அணையை திறந்து வைத்த  அவர், விவசாயிகள் தண்ணீரை  சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், தண்ணீர் தொடர்ந்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழ் அணையை வந்தடைந்த நிலையில், தஞ்சை, அரியலூர், கடலூர், நாகை என நான்கு  மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  பாசனத்துக்கு ஏற்ப அவ்வப்போது தண்ணீரை திறக்க ஏற்பாடு செய்யப்படுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்