ஓணம் பண்டிகை எதிரொலி - கேரளாவுக்கு பூக்கள் ஏற்றுமதி

ஓணம் பண்டிகையை ஒட்டி திண்டுக்கல்லில் இருந்து 35 டன் பூக்கள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஓணம் பண்டிகை எதிரொலி - கேரளாவுக்கு பூக்கள் ஏற்றுமதி
x
ஓணம் பண்டிகையை ஒட்டி, திண்டுக்கல்லில் இருந்து 35 டன் பூக்கள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. வாடா மல்லி, செண்டு மல்லி, அரளி பூக்கள், மல்லிகை, கனகாம்பரம் ஆகிய பூக்கள் கேரளாவிற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்ட வாடா மல்லி, தற்போது கிலோ 80 ரூபாய்க்கும், செண்டு மல்லி கிலோ 20 ரூபாயில் இருந்து, 40 ரூபாய்க்கும் அதிகரித்துள்ளது.  மல்லிகை பூ கிலோ 1200 ரூபாய்க்கும், கனகாம்பரம் ஒரு கிலோ 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்