கோவை : அரிவாளால் கேக் வெட்டிய ரவுடிகள் கைது

கோவை மாவட்டம் சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில் அரிவாளால் கேக் வெட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை : அரிவாளால் கேக் வெட்டிய ரவுடிகள் கைது
x
கோவை மாவட்டம் சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில் அரிவாளால் கேக் வெட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் ரவுடிகள் சிலர் கத்தி அரிவாள் வைத்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. சர்ச்சையை ஏற்படுத்திய இந்த புகைப்படங்களை கொண்டு சதீஷ்குமார், சுந்தர் ஆகியோர் ஏற்கனவே கைதான நிலையில், தலைமறைவாக இருந்த  அமுதன், ராஜரத்தினம், சூரிய மகேஸ்வரன்  ஆகியோரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து   இரண்டு அடி நீளமுள்ள மூன்று வீச்சரிவாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்