காதலியின் வீட்டு முன்பு இளைஞர் தற்கொலை

சென்னையில் காதலியின் வீட்டு முன்பு இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
காதலியின் வீட்டு முன்பு இளைஞர் தற்கொலை
x
சென்னையில் காதலியின் வீட்டு முன்பு இளைஞர் ஒருவர்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை வடபழனியைச் சேர்ந்த மொய்தீன் என்ற இளைஞரும் எண்ணூரை சேர்ந்த 23 வயது பெண்ணும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.  இருவரும் காதலித்ததாகவும்,  அது குறித்து தெரியவந்ததும், பெண்ணை அலுவலகத்திற்கு அனுப்ப அவரது பெற்றோர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மதத்தை காரணம் காட்டி, காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மொய்தீன்,  எண்ணூர் பகுதியில் உள்ள காதலியின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அங்கு மொய்தீன் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்