சென்னையில் கல்வெட்டு ஆராய்ச்சி மைய கிளையை ஏன் அமைக்கக்கூடாது - தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

கல்வெட்டு ஆராய்ச்சி மைய கிளையை சென்னையில் ஏன் அமைக்க கூடாது என தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் கல்வெட்டு ஆராய்ச்சி மைய கிளையை ஏன் அமைக்கக்கூடாது - தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
x
ஜமீன் பல்லாவரம் பகுதியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள  59 ஏக்கர் நிலத்தை யாரும் விற்க, வாங்க, புதிய வீடு கட்ட கூடாது என அதிகாரிகள் அறிவித்ததை, எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் அங்கு உள்ள மக்கள் வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் எந்த பணியையும் செய்யமுடியவில்லை என கூறினார். இதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகளில் தமிழ் அதிகம் உள்ளதால் ஏன் தமிழ்மொழி தெரிந்த ஆராய்ச்சியாளர்களை நியமனம் செய்யக்ககூடாது என்றும் சென்னையில் ஒரு ஆராய்ச்சி மைய கிளையை ஏன் அமைக்க கூடாது என கேள்வி எழுப்பினார். வரும் 25ஆம் தேதிக்குள் இதற்கு தொல்லியல் துறை பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்