சமூக சேவை பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சமூக சேவை இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
சமூக சேவை பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
x
சமூக சேவை  இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் என  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநரின் விருப்புரிமை நிதியில் இருந்து   43 லட்சம் மதிப்பிலான சமையல் உபகரணங்கள், மின் விசிறி  உள்ளிட்ட பொருட்களை ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்களுக்கு அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், சமூக சேவை  என்பது இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் என்றும் , அனைத்து மதங்களும் அதனை வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார். சேவை செய்பவர்களை தான் ரசிப்பதாகவும், அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்