பட்டாசு உற்பத்தியை துவக்கிய ஆலைகள் - முந்தைய பட்டாசுகளை விட 50% மாசு குறைவு

தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்து உள்ளது.
பட்டாசு உற்பத்தியை துவக்கிய ஆலைகள் - முந்தைய பட்டாசுகளை விட 50% மாசு குறைவு
x
பட்டாசால் ஏற்படும் காற்று மாசு குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காற்று மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசு தயாரிக்க அறிவுறுத்தியது. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி, பட்டாசு ஆலைகளை மூடி போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், பசுமைப் பட்டாசு தயாரிக்க தேவையான வேதிப்பொருள் குறித்து ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இதனால், பசுமை பட்டாசுக்கான மூலப்பொருட்கள் கிடைக்காத நிலையில், தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. பட்டாசு தொழிலை நம்பி உள்ள 8 லட்சம் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, உற்பத்தியை தொடங்கியுள்ளதாக தொழிலாளர் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது, தயாரிக்கும் பட்டாசுகள்,  ஏற்கனவே உள்ளதைவிட 50 சதவிகித மாசு குறைந்ததாக இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்