கல்வி முறையில் சிறந்து விளங்கும் பின்லாந்து - பின்லாந்து கல்வி முறை தமிழகத்தில் அமலாகுமா?
பதிவு : செப்டம்பர் 05, 2019, 04:17 AM
கல்வி முறையில் சிறந்து விளங்கும் ஃபின்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அங்குள்ள கல்விமுறைகளை தமிழகத்தில் அமல்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு தான் ஃபின்லாந்து. இந்தியாவுடன் ஒப்பிடும் போது இங்கு மக்கள் தொகை மிகவும் குறைவு என்றாலும், கல்வியில் உலகிலேயே தலை சிறந்த நாடாக விளங்குகிறது, ஃபின்லாந்து.

தங்கள் பிள்ளைகளை 7 வயதில் தான் பள்ளியில் சேர்க்கிறார்கள் அந்நாட்டு பெற்றோர். அதுவரை தங்கள் குழந்தைகளை, குழந்தைகளாகவே வளர்க்கிறார்கள்.

ஒரு வகுப்பறையில் 16 மாணவர்கள், ஒரு நாளைக்கு நான்கே, நான்கு வகுப்புகள் என, உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கிறது ஃபின்லாந்து நாட்டு கல்வி முறை

அதேபோல் இங்கு படிப்பை விட, செயல் வழியிலான கற்றல் தான் அதிகமாக இருக்கிறது.  16 வது வயதில் தான் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் இங்குள்ள கல்விமுறை உள்ளது. 

படித்தே ஆக வேண்டும் என்ற அழுத்தம் இல்லாமல், சுதந்திரமாக வாழ்வியலை எதிர்கொள்ளும் இந்த கல்விமுறையால் ஆசிரியர் பணிக்கு விரும்பி வருவோரும் ஏராளம்.

இத்தகைய பெருமைகள் கொண்ட நாட்டுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  துறை அதிகாரிகளுடன் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

ஃபின்லாந்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை பார்வையிட்ட அவர் தமிழகத்திற்கு வந்து அந்த கல்விமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் உள்ளதா? என்ற கேள்வியை முன்வைக்கின்றனர், கல்வியாளர்கள்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்

அதேநேரம், ஃபின்லாந்து நாட்டில் பின்பற்றப்படும் கல்விமுறையை இங்கே அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜய் சுப்பிரமணியன், சமூக ஆர்வலர் 

மனப்பாடம் செய்து அதனை ஒப்புவிக்கும் மெக்காலே கல்வி முறை, இன்றைய கால கட்டத்திற்கு ஏற்றதல்ல என்பதால் தான் மத்திய அரசு பல மாற்றங்களை புதிய கல்வி கொள்கையில் கொண்டு வந்துள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் நடவடிக்கைகள் என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்... 


பிற செய்திகள்

3- வது நாளாக கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்

வேலை நிறுத்தத்தால், துறைமுகங்களில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், 35 ஆயிரம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

2 views

"மதுரை ஆவின் தலைவராக தமிழரசன் செயல்பட தடை : மீறி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"

மதுரை ஆவின் தலைவராக அ.தி.மு.க முன்னாள் MLA தமிழரசன் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பின்பற்றவில்லை என்றால் ,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

9 views

"வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 2.33 லட்சம் பேர் பயன்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து33 ஆயிரம் பேரின் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

2 views

வங்கிக்குள் கொலை முயற்சி : சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

துப்பாக்கி சூடு நடத்தி காப்பாற்றிய காவலாளி

17 views

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.