ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.30,120 ஆக உயர்வு : ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ரூ.3,640 அதிகரிப்பு

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ரூபாய்வரை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை நிலவரம் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...
x
இந்த ஆண்டு ஜனவரி  மாதத்தில், ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24 ஆயிரத்து 168 ரூபாயாக இருந்தது. மார்ச் மாதத்தில் ஒரு சவரன் 25 ஆயிரத்து 096 ரூபாயாக உயர்ந்தது. மே மாதத்தில் 24 ஆயிரத்து 304 ரூபாயாக இறங்கிய நிலையில், ஜூலை மாதத்தில் மீண்டும் உயர்ந்து 25 ஆயிரத்து 728 ரூபாயாக அதிகரித்தது.

தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, ஆகஸ்ட் மாதத்தில் 26 ஆயிரத்து 480 ஆக ஏற்றம் கண்டது. தற்போது  செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே, ஒரு சவரன்  30 ஆயிரத்து 120 ரூபாய் என்கிற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆகஸ்ட்  மாத தொடக்கத்தில் 26 ஆயிரத்து 480 ஆக இருந்த 22 காரட் தங்கத்தின் விலை ஒரே மாதத்தில் 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் -1 ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதிக்குள் 2 ஆயிரத்து 176 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 656 ரூபாயாக விற்பனை ஆனது. அதன் பின்னர், 31 ஆம் தேதி  நிலவரப்படி 3 ஆயிரத்து 48 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 528 என்கிற அளவை எட்டியது. இந்த நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதி நிலவரப்படி,  இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 30 ஆயிரத்து 120 ரூபாய் எட்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்