அடுத்தடுத்து விழா நாட்கள் எதிரொலி - மல்லிகைப் பூ கிலோ ரூ.1500க்கு விற்பனை

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரும் நிலையில் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அடுத்தடுத்து விழா நாட்கள் எதிரொலி - மல்லிகைப் பூ கிலோ ரூ.1500க்கு விற்பனை
x
விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரும் நிலையில் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் திண்டுக்கல் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி மல்லிகைப் பூ ஒரு கிலோ 1500 ரூபாயாகவும், முல்லைப்பூ கிலோ 800 ரூபாயாகவும் உள்ளது. அடுத்தடுத்து விழா நாட்கள் வர உள்ளதால் பூக்களின் விலை தொடர்ந்து உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்