தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கேபிள் வயர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது - உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கேபிள் வயர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
x
திருப்பூரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கலந்தாய்வு கூட்டம் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அரசு கேபிள் டிவி உள்ள இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இல்லாத இடங்களில் நடைமுறை படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். 15 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் புதிதாக  வாங்க உள்ளதாகவும். மின்கம்பங்கள் மற்றும் அரசு வழித்தடங்களில் அனுமதி இன்றி கொண்டு செல்லப்படுகிற கேபிள் ஒயர்கள் கணக்கெடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்றார். ஏர்செல், டொகோமோ நிறுவனங்கள் தற்போது தமிழகத்தில் செயல்பாட்டில் இல்லை என்றும், இந்த நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் அதிக அளவில் உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.இந்நிறுவனங்களின் புதை வட கேபிள்கள் அரசுக்கு சொந்தமானது என்றும்,இதனை தவறாக யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்