காகித கூழ், கிழங்கு மாவால் தயாராகும் விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்காக தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
காகித கூழ், கிழங்கு மாவால் தயாராகும் விநாயகர் சிலைகள்
x
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது.

சேலம் மாவட்டம்  மோட்டூரில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சேர்ந்து விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது வரை 700 விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அவைகளுக்கு வண்ணம் பூசும் வேலைகள் நடைபெற்று வருவதாக மண்பாண்ட கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன்களுக்கு உணவாகும் வகையிலும், தண்ணீர் மாசுபடாத வகையிலும் விநாயகர் சிலைகள் முழுக்க முழுக்க கிழங்கு மாவினால் தயார் செய்யப்படுவதாக சிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல்,  நாகை மாவட்டம் அரும்பாக்கம் கிராமத்தில் விநாயகர்
சிலை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு நேர்த்தியாக வண்ணம் பூசப்படுவதை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

கற்பகவிநாயகர், எலிவிநாயகர், வீரவிநாயகர், லெட்சுமிவிநாயகர், கருடவிநாயகர் என பல்வேறு வடிவங்களில் தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

மண்பாண்ட தொழில் வளர்ச்சி அடைய அரசு வங்கி கடன் வழங்க வேண்டும் என்றும், பொம்மைகள் செய்வதற்கு களிமண் தங்குதடையின்றி வழங்குவதற்கு அரசு உதவி புறிய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்