சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து - தனியார் உணவு விடுதி ஊழியர் பலி

சென்னையில் உணவு விடுதி ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து - தனியார் உணவு விடுதி ஊழியர் பலி
x
சென்னை வேப்பேரியில் உள்ள  உணவு விடுதி ஊழியர்கள் நேற்று மாலை சமையல் வேலையை முடித்த பின் எரிவாயு சிலிண்டரை அணைக்காமல் வெளியே சென்றுள்ளனர். இதனால் எரிவாயு கசிந்து அறை முழுவதும் பரவி இருந்துள்ளது. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் திரும்பி வந்த ஊழியகள் மின்விளக்கை போட்டவுடன் தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த சிலிண்டர்கள் வெடித்துள்ளது. இதில், பிரவீன்குமார் என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்ட கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்