லண்டன் சென்றடைந்தார், எடப்பாடி பழனிசாமி : இன்று கிங்ஸ் கல்லூரியுடன் ஒப்பந்தம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டனில் இன்று அவசர ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிடுகிறார்.
லண்டன் சென்றடைந்தார், எடப்பாடி பழனிசாமி : இன்று கிங்ஸ் கல்லூரியுடன் ஒப்பந்தம்
x
அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு லண்டன் சென்றடைந்தார். அவருடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் லண்டன் சென்றுள்ளனர். லண்டனில் இரவு தங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று வியாழக்கிழமை, அவசர ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிடுகிறார். மேலும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் கிளையை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பான ஓப்பந்தத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திடுகிறார். வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருகிற 10 ம் தேதி, சென்னை திரும்புகிறார்

Next Story

மேலும் செய்திகள்