அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் - தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சினர் போராட்டம்

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் - தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சினர் போராட்டம்
x
திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன் உள்ள பெரியார் சிலை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பிய அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலை உடைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். 

இதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த போராட்டத்தின் போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்