இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி செல்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
x
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்வுரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு, கலை இரவு, கடலூர் மாவட்ட கட்சியின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா கடலூரில் நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் காரத், இந்திய பொருளாதாரம் தற்போது சரிவை நோக்கி செல்கிறது என்றும், ஆட்டோமொபைல் துறையில் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வருவதாகவும் தெரிவித்தார். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக கூறிய அவர், ரயில்வே துறையில் தனியார் மயத்தை எதிர்த்து மோடியின் தொகுதியான வாரணாசியில் கூட ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றார்.மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், 15 ஆண்டுகளாக இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருவதாக நாங்கள் கூறியதை இப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகள் சாதாரண மக்கள், தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் அளிக்கவில்லை என்றும், கல்விக்கடன், விவசாயக் கடன்களை ரத்து செய்யவில்லை என்றும் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்