முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
x
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2 ஆயிரத்து 144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிகளுக்கான போட்டி தேர்வை எழுத ஒரு லட்சத்து 85 ஆயிரம்ட விண்ணப்பித்துள்ளனர். அதற்கான தேதியை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை போட்டித்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஆன்லைன் முறையில் முதுநிலை ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது. பிராதான பாடப்பிரிவுகளில் இருந்து 110 மதிப்பெண், கல்வி முறை பிரிவில் இருந்து  30 மதிப்பெண், பொது அறிவு பிரிவில் இருந்து 10 மதிப்பெண் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்