அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் - காவல் துறை அதிகாரி

சமீப காலமாக கல்லூரி மாணவர்களும் டிப் டாப் உடையணிந்த பெண்களும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக மதுரை மாநகர காவல் துணை ஆணையர் செந்தில்குமார் கூறினார்.
x
குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக சமீப காலமாக கல்லூரி மாணவர்களும், டிப் டாப் உடையணிந்த பெண்களும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக மதுரை மாநகர காவல் துணை ஆணையர் செந்தில்குமார் கூறினார்.மதுரையில், தங்க நகை விற்பனையாளர்கள் சார்பில், 33 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சியில் பேசிய அவர்,  வணிக நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பம் கொண்ட சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார். குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை  விரைந்து கண்டுபிடிக்க காவல்துறைக்கு கண்காணிப்பு கேமராக்கள் உதவியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்