திருச்சியில் நின்ற கோலத்தில் அத்தி வரதர்...

திருச்சியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் நித்ய அலங்காரத்துடன் காட்சி தரும் அத்திவரதரை காண ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.
x
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் உற்சவம் களைகட்டியிருக்கும் நிலையில் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள கைலாசநாதர் கோயிலிலும் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ருத்ராபிஷேகம் நடப்பது வழக்கம். அப்போது, சதாசிவம், ரங்கநாதர், நாயன்மார்கள், வள்ளி திருமணம் உள்ளிட்ட பல்வேறு தெய்வ திருவுருவங்கள் சந்தன காப்பு அலங்காரங்களாக செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு அத்திவரதரை உருவாக்கி உள்ளனர். கடந்த சில தினங்களாக சயன கோலத்தில் அத்தி வரதர் அருள்பாலித்த நிலையில், இன்று நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அத்திவரதரை திரளான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். காஞ்சிபுரத்துக்கு வந்து வழிபட முடியாத குறையை திருச்சி அத்திவரதர் நிவர்த்தி செய்துவிட்டதாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்