புதுக்கோட்டையில் சாலையில் தாறுமாறாக ஓடி, கார்கள் மோதல்; 6 பேர் பலி

புதுக்கோட்டையில், சாலையில் தாறுமாறாக கார்கள் ஓடி, மோதி உருண்ட விபத்தில், 6 பேர் பலியானார்கள்.
புதுக்கோட்டையில் சாலையில் தாறுமாறாக ஓடி, கார்கள் மோதல்; 6 பேர் பலி
x
புதுக்கோட்டையில், சாலையில் தாறுமாறாக கார்கள் ஓடி, மோதி உருண்ட விபத்தில், 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து, நார்த்தாமலை அருகே அம்மா சமுத்திரம் என்ற இடத்தில் நிகழ்ந்தது. சாலையின் இருபக்கமும் 6 கார்கள், ஒன்றன் மீது மற்றொன்று மோதின. 2 பெண்கள் உள்பட 6  பேர் பலியான நிலையில், காயங்களுடன் மீட்கப்பட்ட 15 பேர், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 2 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்