தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் நீக்கம்..

தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
x
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையின்படி, அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இனி, மணிகண்டன் வகித்து வந்த, தகவல் தொழில்நுட்பத் துறை பொறுப்பை, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூடுதலாக  கவனிப்பார் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.முதலமைச்சராக பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக அமைச்சரவையில் இருந்து, அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்