"அத்திவரதர் தரிசனம் - ஆக.16,17-ல் விஐபி தரிசனம் ரத்து"- காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா

வரும் நாட்களில் அத்திவரதரை தரிசிக்க இரு நாட்கள் கூட ஆகலாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
x
வரும் நாட்களில் அத்திவரதரை தரிசிக்க இரு நாட்கள் கூட ஆகலாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 36-வது நாளன்று 25 ஆயிரம் வாகனங்கள் காஞ்சிபுரம் வந்ததாகவும் அதிகபட்ச தரிசன நேரம் 21 மணி நேரம் என்றும் கூறினார். அத்திவரதர் உற்சவத்தின் கடைசி நாளான ஆகஸ்டு 17ம் தேதி மதியம் 12 மணிக்கு கிழக்கு கோபுர கதவு மூடப்படும் என்றும்,  மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும்  தெரிவித்தார். ஆகஸ்டு 16 மற்றும் 17 -ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும்,
ஆகஸ்டு 16-ம் தேதி  காஞ்சிபுரம் நகரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்