தமிழக-கேரள எல்லையில் ரயில் மோதி ஆண் யானை உயிரிழப்பு

தமிழக-கேரள எல்லையில் ரயில் மோதி ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.
தமிழக-கேரள எல்லையில் ரயில் மோதி ஆண் யானை உயிரிழப்பு
x
தமிழக-கேரள எல்லையில் ரயில் மோதி ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. சாவடிப்பாலம் பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்ற சுமார் 10 வயது ஆண் யானை மீது கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயில் மோதியது. இதில் காயமடைந்த யானை கேரள வனப்பகுதிக்குள் சென்று மயங்கி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கேரள வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. தற்போது வரை இந்தப் பகுதியில் ரயில் மோதி 26 யானைகள் உயிரிழந்துவிட்டதாகவும், ரயில் ஓட்டுனர்கள் அனுமதிக்கப்பட்டதை விட அதிக வேகத்தில் வருவதே இதற்கு காரணம் என்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்