சென்னை போரூரில் போலி பத்திரம் மூலம் நிலம் மோசடி - 2 பேர் கைது

சென்னை போரூரில் 3 கிரவுண்ட் நிலத்தை விற்பனை செய்ததில் மோசடி செய்த இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூரில் போலி பத்திரம் மூலம் நிலம் மோசடி - 2 பேர் கைது
x
சென்னை செயிண்ட் தாமஸ் மலைப்பகுதியில் வசித்து வரும் ராகுல், வானகரத்தில் 3 கிரவுண்ட் நிலத்தை சாதிக் பாட்ஷா என்பவரிடம் கடந்த 2016ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். பின்னர் நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளும் போது இந்த நிலம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என ராகுலுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சாதிக் பாஷாவுக்கு  காசோலைகளில் மூலம் கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை வங்கியின் மூலம் ராகுல் உடனடியாக நிறுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் ராகுல் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்‌ விசாரணை மேற்கொண்டு, போலி பத்திரத்தின் மூலம் நிலத்தை விற்க முயன்ற சாதிக் பாஷா மற்றும் மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்