அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா - திருமணமான மற்றும் கர்ப்பிணி பெண்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா - திருமணமான மற்றும் கர்ப்பிணி பெண்கள் பங்கேற்பு
x
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டு சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு பால், பழம், தேன், சந்தனம், விபூதி, ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூ மாலை அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான கர்பிணி பெண்கள் கலந்து கொண்டு பராசக்தி அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல், மஞ்சள், குங்குமம், தாலிகயிறு மற்றும் மங்கள பொருட்களை பெற்று சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்