"2 சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. வாக்களிக்காதது ஏன்?" - ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரி் பரந்தாமன் கேள்வி

என்.ஐ.ஏ. மற்றும் உபா சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரி.பரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
2 சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. வாக்களிக்காதது ஏன்? - ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரி் பரந்தாமன் கேள்வி
x
என்.ஐ.ஏ. மற்றும் உபா சட்டங்களை  மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரி.பரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில், தேசிய மனித உரிமை கூட்டமைப்பின் தமிழக பிரிவு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவ​ர், மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ள 2 சட்டங்களும் மிக கொடூரமான சட்டங்கள் என்றார். ஆங்கிலேயர் காலத்து இந்திய தண்டனை சட்டங்கள் போதுமானது என்றும் அரி.பரந்தாமன் குறிப்பிட்டார். இந்த இரண்டு சட்ட மசோதாக்களை நிறைவேற்றும்போது தி.மு.க. எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்த்த நிலையில் அக்கட்சி ஆதரவாக வாக்களித்திருப்பது கண்டனத்துக்குரியது என செய்தியாளர்களிடம் பேசிய அரி.பரந்தாமன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்