டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சிறப்பு வாகன சோதனை : தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 28,876 பேர் மீது வழக்கு

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 41 ஆயிரத்து 769 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சிறப்பு வாகன சோதனை : தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 28,876 பேர் மீது வழக்கு
x
சாலைவிபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, சிறப்பு வாகன சோதனையை நடத்த தமிழக காவல்துறை இயக்குநர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் நேற்று தமிழகத்தில், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் தலைக் கவசம் அணியாமல் வந்த 28 ஆயிரத்து 876 பேர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய ஆயிரத்து 25 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரே நாளில் மொத்தம் 41 ஆயிரத்து 769 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, டி.ஜி.பி. அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ட்டு உள்ளது.Next Story

மேலும் செய்திகள்