அத்திவரதர் பொம்மைகள் விற்பனை அமோகம் : பொம்மைகளை ஆர்வமாக வாங்கிச் செல்லும் பக்தர்கள்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் களைகட்டியுள்ள நிலையில் அத்திவரதரின் பொம்மைகளை ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
x
கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் பகுதி திருவிழாக் கோலமாக காட்சியளிக்கிறது. அத்திவரதரை காண தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அத்திவரதரின் தரிசனம் அரிய நிகழ்வு என்பதால் அவரின் உருவ பொம்மைகள் விற்பனையும் இங்கே சூடுபிடித்துள்ளது. இங்குள்ள அஸ்தகிரி தெருவில் அத்திவரதரின் உருவபொம்மைகளை தயாரிக்கும் பணியில் ஏராளமான குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. சயனகோலம், நின்ற கோலம் என இரண்டு விதமாக அத்திவரதர் பொம்மைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அளவை பொறுத்து அதன் விலையும் உள்ளதால் பக்தர்கள் அத்திவரதரின் சிலைகளை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். 

இரண்டு இடங்களில் காத்திருப்பு கூடங்கள் திறப்பு : அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு 


காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக இரண்டு இடங்களில் காத்திருப்பு கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.  தேவையான குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் பக்தர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், வடக்கு மாட வீதி அண்ணா அவின்யூவிலும், டோல்கேட் வாழைத்தோட்டம் அருகேயும் இந்த கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வெயிலில் சாலை ஓரங்களில் காத்திருந்த பக்தர்கள், தற்போது நிழற்கூடங்களில் காத்திருந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்