ராமலிங்கம் கொலை - குற்றப்பத்திரிகை தாக்கல்

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கில் 18 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு , 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ராமலிங்கம் கொலை - குற்றப்பத்திரிகை தாக்கல்
x
கடந்த பிப்ரவரி 5-ம் தேதி கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் மதமாற்றத்திற்கு எதிராக போராடிய ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல்  விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர்பாண்டி முன்னிலையில், 250 க்கும் மேற்பட்ட சாட்சிகள், 400 ஆவண சான்றுகள் மற்றும் 200 பொருள் சான்றுகள், 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 6 பேர் தலைமறைவாக உள்ளதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்