கல்லூரி மாணவியை கொன்று புதைத்ததாக கூறிய காதலன் : சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்ததாக வாக்குமூலம்

தருமபுரி அருகே கல்லூரி மாணவியை கொன்று புதைத்ததாக காதலன் கூறிய இடத்தில் நாயின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்டது.
கல்லூரி மாணவியை கொன்று புதைத்ததாக கூறிய காதலன் : சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்ததாக வாக்குமூலம்
x
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்தவர் முத்தரசி. 19 வயதான இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய சகோதரி தமிழரசி, திருமணமாகி திருப்பூரில் வசித்து வருகிறார். தன் அக்கா வீட்டுக்கு அடிக்கடி வரும் முத்தரசி, அதே ஊரை சேர்ந்த பரத் என்ற டிரைவருடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் முத்தரசி மாயமானார். பரத்துடன் சென்றிருப்பார் என்ற சந்தேகத்தில் விசாரித்த போது அவர் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என கூறியுள்ளார். ஆனால் தமிழரசி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் முத்தரசியை பரத் கடத்தி வந்து கொலை செய்தததாக கூறியுள்ளார். மேலும் அவரது சடலத்தை வீட்டின் பின்புறம் புதைத்ததாகவும் கூறியதை கேட்டு போலீசார் அந்த இடத்தை தோண்டினர். அப்போது அங்கு நாயின் எலும்பு கூடுகள் கிடைத்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு சடலத்தை தேட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்