கரூர் இரட்டைக் கொலை வழக்கு : டி.எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கரூர் மாவட்டம் குளித்தலையில் நடந்த இரட்டைக் கொலை வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
x
நீதிபதிகள் சத்தியநாராயணன் - புகழேந்தி அமர்வு, கொலை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, குளித்தலை டி.எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட ஏரியில், ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும், அவற்றை அரசு நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிப்பது போலாகி விடும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள். வழக்கு விசாரணையை வருகிற14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்