டி.ஜி.பி. எஸ்.ஆர். ஜாங்கிட் இன்று ஓய்வு பெறுகிறார்

தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் அட்டூழியம் செய்து வந்த பவாரியா கொள்ளை கும்பலை ஒழித்த ஐ.பி.எஸ். அதிகாரியான சங்கர் ராம் ஜாங்கிட் இன்று ஓய்வு பெறுகிறார்.
டி.ஜி.பி. எஸ்.ஆர். ஜாங்கிட் இன்று ஓய்வு பெறுகிறார்
x
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த  சங்கர் ராம் ஜாங்கிட், 1985 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானவர்.  நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.,யாக பணி அமர்த்தப்பட்ட அவர், நெல்லை மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றி உள்ளார். வடக்கு மண்டல, ஐ.ஜி.,யாக இருந்த போது, 2001 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஊடுருவி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சன் உள்ளிட்டோரை கொலை செய்த வழக்கில், உத்தரப்பிரதேச மாநில பவாரியா கொள்ளை கும்பலை கண்டறிந்து ஒழித்தவர். சென்னை மாநகர கூடுதல் ஆணையர் மற்றும் புறநகர் ஆணையராக பணியாற்றிய போது,  ரவுடிகள், 'பங்க்' குமார், வெள்ளை ரவி ஆகியோரை என்கவுன்டர் செய்ததோடு, சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்கியவர். அகில இந்திய காவல் பணியிடங்களில், தமிழக காவல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பி வந்தார். தற்போது, டி.ஜி.பி., ரேங்கில், கும்பகோணம், போக்குவரத்து கழக கண்காணிப்பு  அதிகாரியாக பணியாற்றி வரும் ஜாங்கிட் இன்று ஓய்வு பெறுகிறார். காவல் அதிகாரியாக வருவதற்கு முன்பு கல்லூரியில் துணை பேராசிரியராகவும், ஜாங்கிட் பணியாற்றி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்