கல்விக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு - தமிழக கல்வித்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு

புதிய கல்விக் கொள்கை குறித்த பரிந்துரை அறிக்கை ஓரிரு நாளில் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்படும் என துணைவேந்தர்கள் தெரிவித்துள்ளனர்.
x
புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாள் உடன் முடிகிறது.இந்த சூழலில், திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன், சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரிய நாராயண சாஸ்திரி மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர்கள், புதிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழகங்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை, மிக விரைவில் தமிழக அரசுக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும்,புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களின் கருத்துக்களை முழுமையாக மத்திய அரசு கேட்டறிய வேண்டும் எனவும் கூறினர்.

இதேபோன்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் உடன் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலமாக விவாதித்தனர். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் பல்வேறு இயக்குனர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஓரிரு நாளில் தமிழக முதல்வர், பிரதமர் மோடிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் விரிவான கடிதம் ஒன்றை எழுதுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்