கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பினர் மோதல்

கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பினர் மோதல்
x
மணப்பாறையை அடுத்த  கோட்டைக்காரன்பட்டி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன், ஒரு சமூகத்தினரால் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு ஊரிலிருந்த சிலரை அழைக்கவில்லை என கூறப்படுகிறது.அதற்கு அடுத்த நாள், கொட்டப்பட்டியில் நடந்த திருவிழாவின்போது, கோட்டைக்காரன்பட்டி திருவிழாவில் கலந்து கொள்ளாத சிலர் வாக்குவாதம் செய்து, கோவிலை பூட்டியதால் இருதரப்பினருக்கும் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது.கோவிலை பூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினர்  மணப்பாறை - குளித்தலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசியதை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்