சாலிகிராமம் பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்ததால் நோய் பரவும் அபாயம் - பொதுமக்கள் புகார்

சென்னை சாலிகிராமம் பகுதியில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலைகளில் கழிவுநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
சாலிகிராமம் பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்ததால் நோய் பரவும் அபாயம் - பொதுமக்கள் புகார்
x
சென்னை சாலிகிராமம் பகுதியில்  கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, சாலைகளில் கழிவுநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், ஒரு வார காலத்திற்கும் மேலாக கழிவுநீர் சாலையில் ஓடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி  அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டும் அப்பகுதி மக்கள், இதன் காரணமாக அப்பகுதியில்  துர்நாற்றம் வீசுவதாகவும், குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்