ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்குள் அ.தி.மு.க. அரசு விழுந்து விட்டது - மாணிக் தாக்கூர்
சமஸ்கிருத மொழியை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்குள் அ.தி.மு.க. அரசு விழுந்து விட்டது என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூர் குற்றச்சாட்டி உள்ளார்.
சமஸ்கிருத மொழியை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்குள் அ.தி.மு.க. அரசு விழுந்து விட்டது என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூர் குற்றச்சாட்டி உள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் புதிய கல்வி கொள்கை பற்றி இந்த அளவுக்கு விவாதம் நடை பெற்று வருகிறது என்றார். புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தை வரவேற்பதாகவும் நடிகர் சூர்யாவின் விமர்சனம், புதிய கல்வி கொள்கையை , பொது வெளி விவாதத்திற்கு கொண்டு வந்து உள்ளதாகவும் மாணிக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பொது பிரச்சினைகளில், அரசியல்வாதிகள் மட்டும் கருத்து கூற வேண்டும் என்பதை தாண்டி, நாட்டின் மீது அக்கறைகொண்ட அனைவரும் கருத்து கூறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story