தாராபுரத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க தண்ணீர் திறப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், நிலவும் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தற்போது, வந்து கொண்டிருப்பதை அறிந்த பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அமராவதி ஆற்றுக்கு வந்து மலர்கள் தூவி நீரை வரவேற்றனர். பின்னர் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட, தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story