நாடு முழுவதும் நாச வேலையில் ஈடுபட சதி செய்த வழக்கு - கைது செய்யப்பட்ட 16 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தமிழகம் உட்பட நாடு முழுவதும் நாசவேலையில் ஈடுபட முயன்றதாக கைது செய்யப்பட்ட 16 பேருக்கும் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நாடு முழுவதும் நாச வேலையில் ஈடுபட சதி செய்த வழக்கு - கைது செய்யப்பட்ட 16 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x
"அன்சாருல்லா"  என்ற அமைப்பிற்கு ஆட்கள் மற்றும் நிதி திரட்டியதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாகையில் அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இவர்கள் அளித்த தகவலின்பேரில் டெல்லியில் பதுங்கி இருந்த 14 பேரை என்.ஐ.ஏ. போலீசார்  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 16 பேரிடமும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்ததையடுத்து 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து போலீஸ் காவல்  மாலை 5 மணியுடன் முடிவடைந்ததையடுத்து 16 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினார்கள். இதனை விசாரித்த நீதிபதி செந்தூரபாண்டி ஆஜர்படுத்தப்பட்ட 16 பேரையும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்