மாம்பழ நிற மஞ்சள் பட்டாடையில் அத்திவரதர்...

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 25வது நாளான இன்று, அத்திவரதர் மாம்பழ நிற மஞ்சள் பட்டாடையில் அருள் பாலித்து வருகிறார்.
மாம்பழ நிற மஞ்சள் பட்டாடையில் அத்திவரதர்...
x
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவத்தின் 25வது நாளான இன்று அத்திவரதர் மாம்பழ நிற மஞ்சள் பட்டாடையில் காட்சியளிக்கிறார். காலை 5 மணி முதலே பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அத்திவரதருக்கு மகிழம் பூ மாலை, செண்பக பூ மாலை அணிவிக்கப்பட்டு, நெய்வேதியம் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தாலும், அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரை அத்திவரதரை 32 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்