சாலை அமைக்கும் பணிகளுக்கு அனுமதி அளிக்காதது குறித்து வனத்துறை அதிகாரி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
விழுப்புரத்தில் 435 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகளுக்கு அனுமதி அளிக்காதது குறித்து வனத்துறை அதிகாரி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் 435 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகளுக்கு அனுமதி அளிக்காதது குறித்து வனத்துறை அதிகாரி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மரக்காணம் பிரதான சாலை, காக்காபள்ளம் கிராம வனப்பகுதிகளை இணைக்கும் பணிகளை, மீண்டும் தொடங்க கோரி, விழுப்புரத்தை சேர்ந்த கோதண்டம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, விழுப்புரம் மாவட்ட வனத்துறை அதிகாரி தார் சாலை அமைக்க ஏன் அனுமதி அளிக்கவில்லை என்பது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 29 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர் .
Next Story