கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
x
புதுக்கோட்டை

ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட கோரி புதுக்கோட்டையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அதில் கலந்து கொண்டவர்கள் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் வழங்கினர்.

தஞ்சாவூர்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், டெல்டா 
மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகம்  முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியரிடம் கோரிக்கை மனு  அளித்தனர். 

திருவாரூர்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் 
காவிரி படுகை கூட்டமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது.
விளமல் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் 
அலுவலகம் வரை  நடைபெற்ற இந்த பேரணியில் திமுக உள்ளிட்ட
அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்று  முழக்கங்களை 
எழுப்பியவாறு சென்றனர்.  

நாகை

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில் 
காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக  அவுரித்திடலில் 
இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கண்டன
பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சியினர், கிராம மக்கள்   கலந்து கொண்டனர். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்