வெளிநாட்டு பணத்தை காட்டி ரூ.3 லட்சம் மோசடி : 9 பேரை கைது செய்த போலீசார்

வெளிநாட்டு பணத்தை காட்டி தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு பணத்தை காட்டி ரூ.3 லட்சம் மோசடி : 9 பேரை கைது செய்த போலீசார்
x
சென்னை, செளகார்பேட்டையில் செல்போன் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருபவர்  பர்வேஷ் அலாம். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, அவரைத் தொடர்பு கொண்ட நபர் ஒருவர்,  தன்னிடம் 27 லட்சம் சவுதி ரியால் இருப்பதாகவும், இந்திய பணம் 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் அதைத் தருவதாகவும் கூறியுள்ளார்.  அதை நம்பிய பர்வேஷிடம்,  சவுதி ரியால் நோட்டுகள் உள்ள பையை  கொடுத்த அந்த நபர்,  3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.  அவர் சென்ற பின், பையை திறந்து பார்த்த பர்வேஷ், சவுதி ரியால் நோட்டு கட்டுகளில், முன்னும், பின்னும் 4  பணத்தை வைத்துவிட்டு நடுவில் காகிதங்கள் வைக்கப்பட்டு  இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார் சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு, கேளம்பாக்கம், மற்றும் தாழம்பூரில் பதுங்கியிருந்த 9 நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி, மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், அதிக பணம் தருவதாக ஆசைகாட்டி சென்னை, பெங்களூர் உள்பட  பல இடங்களில் தொடர் மோசடியில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 

Next Story

மேலும் செய்திகள்