"6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள்" - அமைச்சர் தங்கமணி தகவல்

புதிதாக 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் - அமைச்சர் தங்கமணி தகவல்
x
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட இரத்த சுத்திகரிப்புப் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, 6 ஆயிரத்து 200 மெகா வாட்  மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றார்.  சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில், 2  இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்