அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு, நீர் வரத்து அதிகரித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அமராவதி அணையின், நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, சின்னாறு, தேனாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு 460 கன அடியில் இருந்து 860 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, மொத்தம் 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில்,  36 அடியாக இருந்த நீர் மட்டம், ஒரே நாளில் 38 அடியாக உயர்ந்தது.

பவானிசாகர் அணை - நீர்வரத்து 174 கனஅடி :



குடிநீர் தேவைக்காக பவானிசாகர் அணையிலிருந்து கூடுதலாக திறக்கப்பட்ட 800  கன அடி  தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த 14 ம் தேதி முதல் விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில் கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.தற்போது வழக்கம் போல் ஈரோடு மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து 205 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 174 கனஅடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்