பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக புகார் - தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக புகார் - தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
x
அன்சருல்லா' என்ற பயங்கரவாத அமைப்புக்கு துபாயில் நிதி திரட்டி தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.இந்தநிலையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள அந்த16 பேரின் வீடுகளிலும் அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள தௌபிக் முகமது வீட்டில்  3 பேர் கொண்ட என்.ஐ. ஏ. அதிகாரிகள் குழு, காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதேபோல நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள முகமது இப்ராஹிம் வீட்டிலும், 10 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர். மதுரை நரிமேட்டில் உள்ள முகமது ஷேக் மொய்தீன் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதேபோல, தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையில் மீரான் கனி, முகமது அப்சல் சகோதரர்களின் தாய் மற்றும் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் உள்ள குலாம்நபி ஆசாத் வீட்டிலும் சோதனை நடத்திய அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த  ரபி அகமது, பைசல் ஷெரீப், முந்தாசீர், முகைதீன் சீனி, சாகுல் அகமது ஆகியோரது வீடுகளிலும்,  வாலிநோக்கம் பகுதியில் உள்ள பாரூக் இல்லத்திலும் என்ஐஏ அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்..நாகை மாவட்டம் தரங்கம்பாடி மடப்புரம் பகுதியை சேர்ந்த முகம்மது இப்ராகிம் என்பவருக்கு சொந்தமான வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 15 ஆண்டுகளாக இவரது வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் வீடு திறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சிக்கிய ஆவணங்கள் மூலம் அடுத்த கட்ட விசாரணையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்