திருமண பாக்கியம் தரும் சீவலப்பேரி துர்க்கை அம்மன் - விமரிசையாக நடக்கும் ஆடிப்பூர திருவிழா

தாமிரபரணி நதி பாய்ந்தோடும் நெல்லை மாவட்டத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சீவலப்பேரி துர்க்கையம்மன் பற்றி இப்போது பார்க்கலாம்...
x
நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் இருக்கிறது விஷ்ணு துர்க்கை கோயில்... தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் திரிவேணி சங்கமத்தில் இருக்கிறது இந்த தலம்... நெல்லை நகரின் கிழக்கு திசையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீவலப்பேரியில் அருள் பாலிக்கிறார் துர்க்கை அம்மன்... 

மருத மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியாக இருந்த இந்த இடத்தில் அகத்திய முனிவர் விஷ்ணுவை வழிபட்டதாகவும், அதன்பிறகே இந்த தலம் உருவானதாகவும் வரலாறு கூறுகிறது... 

சங்கர நாராயணராக விஷ்ணு அமர்ந்த நிலையிலும், நின்ற கோலத்தில் துர்க்கை அம்மனும் காட்சி தரும் கோயில் இது. இந்த கோயிலில் விஷ்ணு பகவான் இருந்தாலும் சக்திகளை ஒருங்கே பெற்றவள் அம்பாள் என்பதால் இங்கு அம்மனை தரிசிக்க வரும் பெண்கள் கூட்டம் அதிகம்... 

திருமண தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனை வணங்கி மஞ்சள் கயிறு வைத்து பூஜை நடத்திச் சென்றால் திருமணம் கைகூடும் என நம்புகிறார்கள் பக்தர்கள்... இதேபோல் ராகு தோஷம் உள்ளவர்களும் இத்தலத்திற்கு வந்து அம்பாளை வணங்கிச் சென்றால் நன்மை கிடைக்கும் என நம்புகிறார்கள்.

கோயிலின் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவம் வெகு பிரசித்தம். மேலும் ஆடிப்பூரம், துர்க்காஷ்டமி போன்ற நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை இங்கு பார்க்க முடியும்...

நெல்லையில் இருந்து கோயிலுக்கு சென்று வர ஏராளமான பேருந்துகளும், ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. தாமிரபரணியில் நீராடி அம்மனை வழிபட்டால் அனைத்தும் கைகூடும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை... 

Next Story

மேலும் செய்திகள்