அஞ்சல்துறை தேர்வு ரத்து - ஸ்டாலின் வரவேற்பு

அஞ்சல் துறை போட்டித் தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படும் என்ற மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அஞ்சல்துறை தேர்வு ரத்து - ஸ்டாலின் வரவேற்பு
x
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. வெற்றி பெற்று என்ன சாதிக்கப் போகிறது என வீண் வாதம் செய்தவர்களுக்கு, இப்போது கிடைத்துள்ள வெற்றி, நிரந்தர வாய்ப்பூட்டு போடும் என நம்புவதாக கூறியுள்ளார்.இரு அவைகளிலும் திமுக உறுப்பினர்கள், அஞ்சல் துறைத் தேர்வுகளை தமிழிலும், மாநில மொழிகளிலும் நடத்திட வேண்டும் என, தீவிர அழுத்தம் கொடுத்து வந்ததாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழகத்தின் உரிமைகளுக்காக - தமிழ் மொழியின் உரிமைக்காக திமுக உறுப்பினர்கள் பாராட்டுக்குரிய பணிகளில் ஈடுபட்டதாகவும் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அனைத்துப் போட்டித் தேர்வுகளும் தமிழில் நடத்தப்பட வேண்டும் -  ராமதாஸ்



மத்திய அரசின் அனைத்துப் போட்டித் தேர்வுகளும் தமிழில் நடத்தப்பட வேண்டும் என, பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு, வரவேற்கத்தக்கது எனக் கூறியுள்ளார். மேலும், ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகளையும் தமிழில் நடத்த அரசு முன் வர வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தபால்துறை தேர்வு ரத்து - தேமுதிக வரவேற்பு :



தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழர்களின் உணர்வை மதித்து, தபால் தேர்வை ரத்து செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இனி வரும் காலங்களில் இதுபோன்ற தேர்வுகள் தமிழ் மொழியில் எழுத மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்